News January 3, 2026

கடலூர்: வீட்டில் செல்வம் செழிக்க இத பண்ணுங்க!

image

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் அமைந்துள்ள தேவநாதப் பெருமாள் கோயில் பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலின் முலவரான தேவநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 6, 2026

கடலூர் அருகே பிடிபட்ட கொள்ளையன்

image

குறிஞ்சிப்பாடி சத்தியம் நகரைச் சேர்ந்த செல்வநாதன் (69) என்பவரது வீட்டில், அடையாளம் தெரியாத நபர் வீட்டினுள் நுழைந்து பீரோவின் சாவியை எடுத்து, 12 சவரன் தங்க நகை மற்றும் ரூ.40,000 பணத்தை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருடனை தேடிய நிலையில், வடலூர் புதுநகரைச் சேர்ந்த அர்ஜுன் (21) என்பவரை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

News January 6, 2026

கடலூரில் இன்று மின்தடை அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம் கீழக்குப்பம், வடக்குத்து, மேலப்பாளையம், ஒறையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.06) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்தந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின்தடை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.5) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.6) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!