News December 27, 2025

கடலூர்: வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை

image

குறிஞ்சிப்பாடி S.K.S.நகர் விரிவாக்கத்தில் வசிப்பவர் செல்வநாதன் (69). அவரது மனைவி லீலாவதி பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு முன் வாசலில் நேற்று கோலம் போட்டு முடித்துவிட்டு உள்ளே சென்ற போது பையுடன் முகமூடி அணிந்த ஒருவர் தப்பி ஓடியுள்ளார். பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்து 20 சவரன் நகை மற்றும் ரூ.60,000 கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News December 27, 2025

கடலூர்: உரம் தேவையான அளவு கையிருப்பு – ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 5,388 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,254 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,683 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 6,144 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 1,509 மெட்ரிக் டன் என மொத்தம் 16,013 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. போதுமான அளவு உரம் கையிருப்பு உள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News December 27, 2025

கடலூர்: ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு

image

தமிழக அரசு<> TNePDS <<>>என்ற ரேஷன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் குடும்ப தலைவர்கள் பதிவு செய்வதன் மூலம் ரேஷன் சம்பந்தமான தகவல், நமக்கு எவ்வளவு பொருள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் இதிலுள்ள புகார் பக்கத்தில் ரேஷன் கடை/ பொருள் குறித்த உங்களது குறைகளையும் தெரிவிக்கலாம். இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News December 27, 2025

கடலூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!