News October 2, 2025
கடலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 7, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.6) இரவு 10 மணி முதல் இன்று (நவ.7) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 6, 2025
கடலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

கடலூர் மாவட்ட மக்களே, உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 6, 2025
கடலூர்: டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூரைச் சேர்ந்தவர் டிரைவர் சிவகுமார் (55). இவர் கடந்த வாரம் மைசூருக்கு சென்றபோது விபத்தில் சிக்கினார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரத்தில் உள்ள தனது அக்கா மகள் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் சிவக்குமார் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


