News August 17, 2024

கடலூர் விளையாட்டு வீரர்களுக்கு அறிவிப்பு

image

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூர் மாவட்டம் சார்பில் 2024-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தகுதியுடையோர் WWW sdat.tn.govt.in என்ற இணையதளத்தில் வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

கடலூர்: ஆற்றில் மூழ்கி பரிதாப பலி !

image

கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 78). இவர் நேற்று சாவடி கெடிலம் ஆறு அணைக்கட்டு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது. சவுந்தரராஜன் கால் தவறி ஆற்றில் விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News September 18, 2025

கடலூர் மக்களே இதனை கவனத்தில் கொள்ளுங்கள்!

image

கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப்.18) நடைபெற உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மங்களூர் அடுத்த போத்திரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருநாரையூர் பகுதியில் உள்ள சைக்ளோன் ஷெல்டர், பரங்கிப்பேட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட சிவம் மஹால் மற்றும் விருத்தாசலம் திருமலை திருச்சானூர் மண்டபம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடக்கிறது.

News September 18, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் முழு விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!