News November 1, 2025
கடலூர்: விபத்தில் பெண் பரிதாப பலி

பண்ருட்டி, மேல்குமாரமங்கலம் விஜயசங்கர் மனைவி ராஜஸ்ரீ (33). கடலூரில் உள்ள மருத்துவமனைக்கு ராஜஸ்ரீயை அவரது சகோதரர் ராஜா (42) ஆட்டோவில் (அக்.31) அழைத்து சென்றுள்ளார். அப்போது குடிதாங்கிசாவடி அருகே ஆட்டோ மீது எதிர் திசையில் வந்த சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News November 1, 2025
கடலூர் அருகே ரயில்வே கேட் மூடல்

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் ஆலை ரோடு 147-வது எண் கொண்ட ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.1) காலை 9மணி முதல் மாலை 5 மணி வரையிலும், அதுபோல நவ.02-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்ட்டுள்ளனர்.
News November 1, 2025
கடலூர்: கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

கடலூர் மாவட்டம், தட்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகள் ப்ரீத்தி (18). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் பிரீத்தி தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த காரணத்தால், அவரது தாய் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த ப்ரீத்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 1, 2025
கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் (அக்டோபர் 31) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


