News March 19, 2024
கடலூர்: வாகனங்களில் கட்சி கொடியை அகற்ற அறிவுறுத்தல்

நாடாளுமன்ற தேர்தலை (2024) முன்னிட்டு கடலூர் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் இன்று மாலை மஞ்சக்குப்பம் பகுதியில் டி.எஸ்.பி பிரபு தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்பொழுது கட்சி கொடியுடன் வந்த வாகனங்களை நிறுத்தி கொடிகளை அகற்றுமாறு வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.
Similar News
News October 17, 2025
கடலூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க<
News October 17, 2025
கடலூர்: 10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

திட்டக்குடி வட்டம், கழுதூர் கிராமத்தில் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, ராஜேஸ்வரி, ஆகிய 4 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் தவமணி என்ற பெண்ணுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
கடலூர்: புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் வெளியீடு

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, பலகாரம் மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணை நேற்று வெளியிட்டார். இந்த எண்ணில் தரம் மற்றும் சுகாதாரம் இல்லாத உணவுப் பொருட்கள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.