News December 13, 2025
கடலூர்: வயிற்று வலியால் தொழிலாளி விபரீத முடிவு

கடலூர் வில்வநகரை சேர்ந்தவர் தொழிலாளி எட்வர்ட் பிரான்சிஸ்(55). இவர் வயிற்று வலியால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் மனமுடைந்த எட்வர்ட் பிரான்சிஸ் நேற்று(டிச.12) காலை 11 மணி அளவில் தனது வீட்டில் தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 2, 2026
கடலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் / சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தி
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 2, 2026
கடலூர் மாவட்டத்தில் 25 தாசில்தார்கள் இடமாற்றம்

கடலூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வேலைபார்த்து வரும் 25 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி – ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ளார். இதில் கடலூர் தாசில்தார் மகேஷ், பண்ருட்டி தாசில்தாராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News March 2, 2026
கடலூர்: கலைஞர் வருமுன் காப்போம் திட்டம்; 2 லட்சம் பேர் பயன்

கடலூர் மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 184 பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அலுவகர்கள் தெரிவித்துள்ளார்.


