News December 9, 2025

கடலூர்: வயலில் பிணமாக கிடந்த நபர்

image

ஒரத்தூர் அடுத்த வடகரிராஜபுரத்தை சேர்ந்தவர் தொழிலாளி ராஜமோகன்(42). இவர் நேற்று தாதாம்பேட்டை அய்யனார் கோயில் எதிரில் உள்ள வயலில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஒரத்தூர் போலீசார் வழக்குபதிந்து, ராஜமோகன் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 9, 2026

பாமக மாவட்ட செயலாளர் நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு

image

கடலூர் வடக்கு மாவட்ட ராமதஸ் அணி பாமக செயலாளர் வடக்குத்து கோ.ஜெகன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இவருடன் சேர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் அணி) மூன்று பொறுப்பாளர்களை நீக்கம் செய்து அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக இவர் அன்புமணி ராமதாஸ் அணி பாமக வேட்பாளருக்கு ஆதவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

News April 9, 2026

கடலூர்: மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

கடலூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 9, 2026

கடலூர் மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதி முதல் இன்று ஏப்ரல் 9ஆம் தேதி வரை இயல்பாக 22.7 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 44.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 95 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!