News October 12, 2025
கடலூர்: வடமாநில இளைஞர் பரிதாப பலி

புவனகிரி அருகே பு.உடையூர் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளி மங்கள் பௌரி என்பவர், வயலில் நாட்டு நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மங்கள் பௌரியை எதிர்ப்பாராத விதமாக மின்னல் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து புவனகிரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Similar News
News March 10, 2026
கடலூர்: விபத்தில் பெண் தலை நசுங்கி பலி

பண்ருட்டி அடுத்த சித்திரைச்சாவடியை சேர்ந்தவர் வளர்மதி(55). இவர் நேற்று கணிசப்பாக்கம் சாலையில் நடந்து சென்றபோது எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி வளர்மதி மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி வளர்மதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 10, 2026
கடலூர்: திமுக மாநாட்டிற்கு சென்ற கார் கவிழ்ந்து விபத்து

திருச்சியில் நேற்று மாலை திமுக மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு, செங்கல்பட்டிலிருந்து காரில் சென்று திரும்பி வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ராமநத்தம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தாஸ்(60), சதீஷ்(38), சுரேஷ்(38), ஜீவா(15) தனபால்(40), உமாபதி(40), ஜெயராமன்(45) 7 பேர் காயமடைந்து வேப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை.