News December 18, 2025
கடலூர்: ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.17) இரவு 10 மணி முதல் இன்று (டிச.18) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 21, 2025
கடலூர்: பாட்டிலுக்கு ரூ.10; புதிய திட்டம் அமல்

கடலூர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை, காலியாகிய பின் அதே டாஸ்மாக் கடையில் திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் நாளை (டிச.22) முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக மது பாட்டில்களை வாங்கும் போது கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு, காலி பாட்டிலாக அதே கடையில் ஒப்படைக்கும்போது அந்த தொகை திரும்ப வழங்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 21, 2025
கடலூர்: கிரைண்டர் வாங்க ரூ.5,000 !

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியம் வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். SHARE !
News December 21, 2025
கடலூர்: டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

வெண்கரும்பூரை சேர்ந்தவர் மணிகண்டன் (37). இவர் பைக்கில் தனது மகன் விஷ்வாவுடன் கருவேப்பிலங்குறிச்சி சென்றபோது, எதிரே வந்த பெண்ணாடத்தை சேர்ந்த ஜெகன் (25) என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மணிகண்டன், விஷ்வா ஆகியோர் படுகாயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


