News November 3, 2025

கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (நல.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, ஆகிய உட்கோட்டங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 3, 2025

கடலூர்: சாராய ஊறல் அமைப்பு-2 பேர் கைது

image

சிறுதொண்டமாதேவி முந்திரி காட்டில் சாராயம் காய்ச்சப்படுவதாக காடாம்புலியூர் போலீசாருக்கு நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் சிறுதொண்டமாதேவியைச் சேர்ந்த மேகநாதன் (37), பாஸ்கர் (37) என்ற 2 பேரை கைது செய்து, மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

News November 3, 2025

கடலூர்: துணிக்கடையில் தவறவிட்ட பணம் ஒப்படைப்பு

image

கடந்த 17.10.2025 அன்று கடலூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் தீபாவளி துணி எடுக்க வந்த பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த அனிதா என்பவர் ரூ.10,500-ஐ துணிக்கடையில் தவறவிட்டுள்ளார். இதையடுத்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், புதுநகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாலு தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு பணத்தை கண்டுபிடித்து நேற்று அனிதாவிடம் ஒப்படைத்தனர்.

News November 3, 2025

கடலூர்: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000 – ரூ.2,20,000
3 கல்வித் தகுதி: B.E., B.Tech., CA., CMA., MBA.,
4. வயது வரம்பு: 45 வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!