News December 30, 2025
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(டிச.25) இரவு 10 மணி முதல் இன்று(டிச.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 12, 2026
நெய்வேலி: இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

நெய்வேலி அடுத்த காட்டுக்கூனங்குறிச்சி மேற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (60). இவர் மந்தாரக்குப்பம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் அந்த பெண் 8 மாத கர்ப்பமானார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தோணிராஜை கைது செய்தனர்.
News February 12, 2026
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News February 12, 2026
கடலூர்: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

சேத்தியாத்தோப்பு அடுத்த பொன்னங்கோவிலை சேர்ந்தவர் செல்வமணி மகள் ஷிவாணி (16). பூதங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஷிவானி, நேற்று மாலை பெற்றோர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


