News September 24, 2025
கடலூர்: ரூ.75,000 கையாடல்-காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

ராமநத்தம் காவல் ஆய்வாளர் பிருந்தா என்பவர் கடந்த 8-9-2025 அன்று மூதாட்டி ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபாகரனை (39) கைது செய்தார். இந்நிலையில் பிரபாகரனிடம் பறிமுதல் செய்த ரூ.75 ஆயிரத்தை ஆய்வாளர் பிருந்தா கையாடல் செய்ததாக அறிந்த விழுப்புரம் சரக டிஐஜி உமா, ஆய்வாளர் பிருந்தாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயுதப்படைக்கு மாற்றிய நிலையில், நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
Similar News
News September 24, 2025
கடலூர்: கூடுதலாக 31 வாக்குச்சாவடி உருவாக்கம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் சட்டமன்றத் தொகுதியில் பகுப்பாய்வுக்கு முன் 227 வாக்குச்சாவடி, புதிய வாக்குச்சாவடி மையம் 31, இடம் மற்றும் கட்டட மாற்றம் 2 என பகுப்பாய்வுக்குப் பின்னர் மொத்தம் 258 வாக்குச்சாவடி உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார்.
News September 24, 2025
கடலூர்: பெற்றோருக்கு பயந்து இளம்பெண் தற்கொலை

கடலூர், முதுநகர் அன்னவல்லியைச் சேர்ந்தவர் பிரபாவதி (25). இவர் தனது தோழிகளுடன் திருப்பதி சென்று விட்டு நேற்று சொந்த ஊர் திரும்பினார். அப்போது வரும் வழியில் தனது ஒரு பவுன் நகை மற்றும் செல்போனை தொலைத்து விட்டதால் பெற்றோர் திட்டுவார்கள் என பயந்த பிரபாவதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News September 24, 2025
கடலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <