News July 9, 2025
கடலூர்: ரயில்வே கேட் கீப்பருக்கு சிறை

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று (ஜூலை 08) காலை தண்டவாளத்தை கடந்த பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் மோதி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை நேற்று கைது செய்த போலீசார், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News July 9, 2025
கடலூர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விஸ்வேஷ்

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று நடைபெற்ற ரயில் விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், செம்மங்குப்பம் ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மாணவர் விஸ்வேஷ் வீடு திரும்பினார். ரயில் விபத்தில் அவரது சகோதரர் நிமலேஷ் உயிரிழந்த நிலையில், இன்று அவர் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
News July 9, 2025
கடலூர்; 10th முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை

கடலூர் மாவட்ட மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <
News July 9, 2025
செம்மங்குப்பம்: புதிய கேட் கீப்பர் நியமனம்

கடலூர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளார். முன்னதாக ரயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அவருக்கு அறிவுறுத்தியதாக ஆனந்தராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மொழி தெரியாதவரை தமிழகத்தில் பணியமர்த்தியது சர்ச்சையான நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த நபர் புதிய கேட் கீப்பராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.