News August 19, 2024
கடலூர்: மூட்டையில் மனு

பண்ருட்டி அருகே அக்கடவல்லி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் இன்று தான் ஏற்கனவே அளித்த மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் மனு அளிக்க வந்தார். அந்த மனுவில் அக்கடவல்லி ஊராட்சியில் ரூ.9 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளது என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
CM மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் – அமைச்சர் அறிக்கை வெளியீடு

அமைச்சர் M. R. K. பண்ணீர்ச்செல்லவம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை கடலூர், மஞ்சை நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் CM மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 6, 2026
கடலூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

கடலூர் மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News April 6, 2026
கடலூர்: பள்ளி மாணவி கர்ப்பம்

நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டை சேர்ந்தவர் பிரவீன்(20). இவர் 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை காதலித்தார். மேலும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி சென்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார், பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


