News November 24, 2025
கடலூர்: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று(நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 24, 2025
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.24) காலை 8.30 மணி நிலவரப்படி சேத்தியாத்தோப்பு 210 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டை 141 மில்லி மீட்டர், சிதம்பரம் 140.2 மில்லி மீட்டர், புவனகிரி 140 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 103 மில்லி மீட்டர், ஶ்ரீ முஷ்ணம் 86.1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 1681.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
News November 24, 2025
கடலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்குத்து, கீழக்குப்பம், கீழக் கொல்லை, காடாம்புலியூர் ஆகிய துணை மின் நிலைய பகுதியில் நாளை (நவ 25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளத. இதன் காரணமாக மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது என மின்வாரிய செயற்பொறியாளர்கள் பண்ருட்டி சிவக்குமார் குறிஞ்சிப்பாடி செல்வமணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
News November 24, 2025
கடலூர்: பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

நெல்லிக்குப்பம் சிவசண்முக நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(65). தொழிலாளியான இவர் நெல்லிக்குப்பத்தில் நேற்று தனியார் பேருந்தில் ஏறும் போது தவறி கீழே விழுந்தார். அப்போது பேருந்தை இயக்கியதால், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


