News January 29, 2026
கடலூர்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கடலூர் மாவட்டம் ரெட்டாக்குறிச்சியை சேர்ந்தவர் தொழிலாளி கிருஷ்ணன் (60). இவர் நேற்று கீழ்ஒரத்தூரிலுள்ள சுரேஷ் என்பவர் வயலுக்கு கூலி வேலைக்கு சென்றார். அப்போது கிருஷ்ணன், வயலுக்கு அருகேயுள்ள சோலார் மின் கம்பிவேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 3, 2026
‘அண்ணா புகழைப் போற்றி வணங்குகிறேன்’ – சிதம்பரம் MLA

‘தமிழன்னையின் தவப்புதல்வன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்த தமிழ் தாயின் தலைமகன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57 வது நினைவு தினத்தில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்’ என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கடலூர் மாவட்ட செயலாளரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான கே.ஏ. பாண்டியன் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
கடலூர்: 71,000 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 9 தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 71 ஆயிரத்து 290 பேர் விண்ணப்பித்துள்ளதாக கடலூர் மாவட்டம் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
கடலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் கடலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.


