News January 7, 2026
கடலூர்: மிக கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 28, 2026
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <
News January 28, 2026
கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

கடலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 28, 2026
கடலூர்: துப்புரவு பணியாளருக்கு நேர்ந்த சோகம்

சிதம்பரம் அடுத்த கவரப்பட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் (47). துப்புரவு பணியாளரான இவர், நேற்று வீட்டிற்கு நடந்து சென்றபோது அவரது காலில் விஷபூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை கவரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.


