News October 22, 2025

கடலூர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ‘1077’, ‘04142-220 700’ ஆகிய எண்கள் மூலமாக மழை, வெள்ள மற்றும் அவசர உதவிக்கு கட்டுப்பாடு அறையை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE

Similar News

News January 31, 2026

கடலூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

கடலூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

கடலூர்: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற<> ‘இங்கே கிளிக்’ <<>>செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News January 31, 2026

வடலூருக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் நாளை (பிப் 1) தைப்பூச ஜோதி தரிசன விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கடலூர் மண்டல போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று (ஜன 31) முதல் 3 நாட்கள் (2.2.2026) வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருச்சி, மதுரை, கோவை, சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வடலூருக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

error: Content is protected !!