News December 18, 2025
கடலூர் மாவட்ட எஸ்.பி அறிவிப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியம் சார்பில் எழுத்துத் தேர்வு வரும் டிச.21 அன்று கடலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 7,228 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். காலை 10 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. எனவே தேர்வு எழுதுவோர் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் காலை 8:30 மணிக்குள் இருக்க வேண்டும் என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
கடலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, கலை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிருக்கு ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8) தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும் ஒளவையார் விருதுக்கு, கடலூர் மாவட்டத்தில் தகுதி உடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்

கடலூர்: கோடி கோடியாக மோசடி செய்தவர் கைது

நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழ் வேந்தன் (60). என்.எல்.சி. தொழிலாளியான இவர் நெய்வேலி, விருத்தாசலம் பகுதி மக்களிடம் ரூ.3 லட்சம் கொடுத்தால் ஆறு மாதத்திற்கு பிறகு 3 கோடி தருவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி 100-க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் வசூலித்து ரூ.5 கோடி வரை மோசடி செய்துள்ளார். இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து நேற்று தமிழ் வேந்தனை கைது செய்தனர்.