News August 12, 2024
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் சுதந்திர தினமான 15ஆம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
கடலூர்: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News March 6, 2026
கடலூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில்<
News March 6, 2026
புதிய நியாய விலை கடைகள் திறந்து வைப்பு

கடலூர் மாவட்டம், தீர்த்தனகிரி ஊராட்சி கருவேப்பம்பாடி கிராமத்தில் நியாய விலை கடை இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் திறந்து வைத்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல அம்பலவாணன்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் நியாய விலை கடை திறக்கப்பட்டது.


