News December 20, 2024
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினாப் போட்டி நாளை (21.12.2024) சனிக்கிழமை, கடலூர், திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதுஇதில் தகுதி பெறும் 3 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு 28.12.2024 அன்று விருதுநகரில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது போக்சோ வழக்கு

விருத்தாசலம் அருகே சாத்தியம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்முருகன்(28). இவர் 16 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கர்ப்பமான சிறுமிக்கு சிதம்பரம்அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி நல்லூர் ஊர்நல அலுவலர் மணிமேகலைவிருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அருள்முருகன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News March 7, 2026
வாட்ஸ்அப் மூலம் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

பண்ருட்டி பகுதியில் வாட்ஸ்அப்பில் குழுக்கள் உருவாக்கி அதன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பண்ருட்டி போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது செல்போனில் வாட்ஸ்அப் மூலம் லாட்டரி சீட்டு விற்ற
திருவதிகையை சேர்ந்த திருநாவுக்கரசு சிவா(59), பண்ருட்டி பனங் காட்டு தெரு பன்னீர்செல்வம்(56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News March 7, 2026
மஞ்சக்குப்பம்: தூக்கத்தில் உயிரிழந்த இளைஞர்

கடலூர் துறைமுகத்தை சேர்ந்தவர் வினோத்(37). இவர் நேற்று முன்தினம் இரவு மஞ்சக்குப்பத்தில் உள்ள தனது சித்தி உத்ரா(47), வீட்டிற்கு வந்து தூங்கினார். பின்னர் நேற்று காலை எழுப்பியபோது, மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார். உடனே கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


