News November 24, 2025
கடலூர் மாவட்டத்தில் 332 பேர் கைது

கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 128 கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதுவரையில் 332 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று தெரிவித்துள்ளார். இதில், 208 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், 15 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
கடலூர்: பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

நெல்லிக்குப்பம் சிவசண்முக நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(65). தொழிலாளியான இவர் நெல்லிக்குப்பத்தில் நேற்று தனியார் பேருந்தில் ஏறும் போது தவறி கீழே விழுந்தார். அப்போது பேருந்தை இயக்கியதால், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News November 24, 2025
புத்தூர்: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

புத்தூர் அடுத்த சின்னமணல்மேடு பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து, அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயா(40) என்பவருக்கு சொந்தமான பசுமாடு மீது விழுந்தது. இதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது . இதுகுறித்து புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 24, 2025
கடலூர்: கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழப்பு

திட்டக்குடி அடுத்த கொரக்கை கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் செல்ல பெருமாள்(90). இவரது மனைவி அலமேலு (80). வயது மூப்பு காரணமாக செல்ல பெருமாள் உயிரிழந்தார். இதையடுத்து நேற்று அவரது இறுதி சடங்கு நடைபெற்ற போது, துக்கம் தாங்காமல் இருந்த அலமேலு திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சாவிலும் இணைபிரியாத தம்பதி ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


