News February 24, 2026

கடலூர் மாவட்டத்தில் 32,451 பெண் வாக்காளர்கள் அதிகம்

image

கடலூரில், இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 8 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகமுள்ளனர். அவ்வகையில், திட்டக்குடி 3218, விருத்தாசலம் 1176, பண்ருட்டி 7028, கடலூர் 10,473, குறிஞ்சிப்பாடி 4225, புவனகிரி 1379, சிதம்பரம் 3779, காட்டுமன்னார்குடி 1173 என மொத்தம் 32,451 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நெய்வேலியில் மட்டும் பெண்களை விட 2 ஆண் வாக்காளர்கள் அதிகமுள்ளனர்.

Similar News

News March 1, 2026

காடாம்புலியூர் அதிமுக நிர்வாகி உயிரிழப்பு: EPS இரங்கல்

image

பண்ருட்டி பணிக்கன்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் A. வேலு காடாம்புலியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து‌ கொண்ட நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தையும் இன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

News March 1, 2026

கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 1, 2026

கடலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!