News March 2, 2026
கடலூர் மாவட்டத்தில் 25 தாசில்தார்கள் இடமாற்றம்

கடலூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வேலைபார்த்து வரும் 25 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி – ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ளார். இதில் கடலூர் தாசில்தார் மகேஷ், பண்ருட்டி தாசில்தாராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News March 11, 2026
ராணுவ கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜனவரி 2027 பருவத்தில் VIII ஆம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு இந்திய நாட்டில் குறிப்பிட்ட சில மையங்களில் வருகிற ஜூன் 7ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வானது தமிழகத்தில் சென்னையில் நடைபெற உள்ளது என்றும், மேலும் விவரங்களை www.rimc.edu.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
கடலூர்: திருமணம் ஆகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் செய்தி குறிப்பு வெளியிடுள்ளார். அதில், 2027 ஆட்சேர்ப்பு ஆண்டிற்கான அக்னிவீர் பொதுப்பணி பிரிவுக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இராணுவத்தில் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம் இதற்கு வருகிற ஏப்.1ஆம் தேதிக்குள் <
News March 11, 2026
கடலூர்: MLA தலைமையில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி மேற்கு ஒன்றிய பகுதியில் இருந்து மாற்றுக்கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், அக்கட்சிகளில் இருந்து விலகினர். அதனைத் தொடர்ந்து அனைவரும் நேற்று மாலை(மார்.10) நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் தலைமையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், புதிய உறுப்பினர்களுக்கு திமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.


