News February 27, 2026
கடலூர் மாவட்டத்தில் 18,919 டன் உரம் இருப்பு- ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 5,558 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 2,242 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,810 மெட்ரிக் டன்னும், காம்ப்லக்ஸ் உரம் 7,853 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,457 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 18,919 மெட்ரிக் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனால் தேவைப்படும் விவசாயிகளுக்கு உரம் தடையின்றி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 28, 2026
கடலூர்: சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது வழக்கு

கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் மகாராஜா(28). இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது, அங்கிருந்த டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீசார் மகாராஜா மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 28, 2026
கடலூர்: திமுக – அதிமுக நிர்வாகிகள் மோதல்

சிதம்பரம் அடுத்த கண்ணங்குடியை சேர்ந்தவர் கண்ணன்(46). திமுக கிளை செயலாளரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் குமரேசனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த விரோதம் காரணமாக இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் இருதரப்பை சேர்ந்த கண்ணன், குமரேசன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 28, 2026
நெய்வேலி: என்எல்சி இன்ஜினியர் தற்கொலை

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் வேணுகோபால்(32). என்எல்சி 2-வது சுரங்கத்தில் இன்ஜினீயராக வேலை பார்க்கும் இவர் நெய்வேலியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று அவர் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிந்து வேணுகோபால் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


