News August 30, 2025

கடலூர் மாவட்டத்தில் 15,751 டன் உரம் இருப்பு- ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 3,632 டன்னும், டி.ஏ.பி 2,581 டன்னும், பொட்டாஷ் 1,492 டன்னும், காம்பளக்ஸ் உரம் 6,628 டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,418 டன்னும் என மொத்தம் 15,751 டன் இருப்பு உள்ளது. மேலும், விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரம் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News November 9, 2025

கடலூர்: பள்ளி தாளாளர் மகன் குண்டாசில் கைது

image

வீராரெட்டிகுப்பம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ராதிகா (35) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ஆசிரியயை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளியின் தாளாளரின் மகன் பிரின்ஸ் நவீன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் பிரின்ஸ் நவீன் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டது.

News November 9, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 8, 2025

கடலூர்: 8-வது படித்தவர்களுக்கு அரசு வேலை

image

தமிழக நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு முடித்த, 18-35 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள<> ‘இங்கே’ <<>>க்ளிக் செய்யவும். SHARE!

error: Content is protected !!