News October 16, 2025
கடலூர் மாவட்டத்தில் 15 பேர் கைது!

கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் கூறுகையில், ‘ தீபாவளி பண்டிகையையொட்டி பழைய குற்றவாளிகள் 137 பேரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதில் 15 பேரை கைது செய்துள்ளோம். இது தவிர மாவட்டம் முழுவதும் பிரச்சனைக்குரிய பகுதிகளை கண்டறிந்து, அதில் 65 கிராமங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி பிரச்சனை ஏற்படும் என தெரிகிறது. இதனால் அந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
Similar News
News October 16, 2025
தர நிர்ணயத்தை பின்பற்ற வேண்டும்; ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி இனிப்பு மற்றும் கார வகைகளின் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு (ம) தர நிர்ணய விதிமுறைகளை
பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இனிப்பு கார வகைகள் செய்ய சுத்தமான எண்ணெயில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
கடலூர்: பேரிடர் கால உதவி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 1077, 04142220700, 04142290325, 04142290326, 04142290327 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
கடலூர்: தந்தையை கொலை செய்த மகன்

ராமநத்தத்தை சேர்ந்தவர் பழனிமுத்து (49). இவரது மகன் கார்த்திக் (23). இவர் கடந்த 13-ந்தேதி மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பழனிமுத்துவுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவரது முகத்தில் கத்தியால் வெட்டியதோடு, செங்கல்லால் தாக்கினார். பின்னர் தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பழனிமுத்து நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக்கை கைது செய்தனர்.