News September 9, 2025

கடலூர் மாவட்டத்தில் விஜய் சுற்றுப்பயணம்!

image

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக இன்று அட்டவணை வெளியானது. இந்த நிலையில் கடலூரில் நவம்பர் 22 ஆம் தேதி சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News April 6, 2026

CM மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் – அமைச்சர் அறிக்கை வெளியீடு

image

அமைச்சர் M. R. K. பண்ணீர்ச்செல்லவம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடலூர் மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாளை கடலூர், மஞ்சை நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் CM மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

கடலூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

கடலூர் மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News April 6, 2026

கடலூர்: பள்ளி மாணவி கர்ப்பம்

image

நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டை சேர்ந்தவர் பிரவீன்(20). இவர் 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியை காதலித்தார். மேலும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி சென்று தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார், பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!