News August 25, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (25/08/2024) கடலூர் காவல் ஆய்வாளர் சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அம்பேத்கர், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 6, 2026

தந்தை இறந்த துக்கத்திலும் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

image

பண்ருட்டி பணிக்கன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(52). மூங்கில் படல் செய்யும் கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது ஒரே மகன் சுசீந்திரன் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தந்தை இறந்த துக்கத்திலும் நேற்று பொதுத்தேர்வு எழுதினார்.

News March 6, 2026

கடலூர்: வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது

image

கடலூர், இந்திரா நகரை சேர்ந்தவர் முரளி(53). வாகன ஓட்டுனராக உள்ள இவர், கடந்த மார்.3ஆம் தேதி மது வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பின் தொடர்ந்து பைக்கில் வந்த 3 பேர், அவரை சரமாரியாக தாக்கி விட்டு பணம், செல்போன், மது பாட்டிலை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி போலீசார் சந்துரு(21), ஜானகிராமன்(24) இருவரை நேற்று கைது செய்து, ஆதித்தின் என்பவரை தேடி வருகின்றனர்.

News March 6, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விபரம்

image

கடலூர், காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (மார்.4) இரவு 10 மணி முதல் நாளை (மார்.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!