News April 13, 2025
கடலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும் தமிழகத்தில் இரவு 7 மணி வரை ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலூரில் லேசான மழை முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்க அறிவுருத்தப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க
Similar News
News October 30, 2025
கடலூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

கடலூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <
News October 30, 2025
கடலூர்: வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்

சிதம்பரம் அடுத்த பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். இவரது நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த யாசின் (20) என்பவர் பழுது நீக்கி கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 30, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.29) இரவு 10 மணி முதல் இன்று (அக்.30) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!


