News October 10, 2025
கடலூர் மாவட்டத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்!

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் 4 பேரும், கடலூர் தனியார் மருத்துவமனையில் 3 பேரும், கடலூர் அரசு மருத்துவமனையில் ஒருவரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News October 10, 2025
கடலூர்: அழுகிய நிலையில் பெண் சடலம்

கடலூர், அண்ணா பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரபரப்பாக இருக்கக்கூடிய கடலூர் மையப் பகுதியான அண்ணா மேம்பாலத்தின் கீழ், அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் இன்று மதியம் புது நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதையெடுத்து, சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 10, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் பண்ணை சார்ந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் (அக்.9) அறிக்கை வெளியிட்டுள்ளார். விவசாயம், அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்ற மற்றும் 2 ஆண்டுகள் கள அனுபவம் உள்ளவர்கள் கடலூர் மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் வரும் அக்.17-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9444094258 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News October 10, 2025
கடலூர்: கனரா வங்கியில் வேலை APPLY NOW!

கனரா வங்கியில் தமிழ்நாடு முழுவதும் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி: Graduate Apprentices
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.15,000
4. வயது வரம்பு: 20-28 (SC/ ST-33, OBC 31)
5. கடைசி தேதி: 12.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <