News January 25, 2025
கடலூர் மாவட்டத்தில் நாளை 683 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

குடியரசு தின விழா நாளை (ஜனவரி 26 ஆம் தேதி) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராமங்களிலும், கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். மேலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
கடலூர்: 683 கிராமங்களில் நாளை கிராமசபை கூட்டம்

சுதந்திர தின விழா நாளை (15.8.2025) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 கிராமங்களிலும், கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். மேலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் அறிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
நெய்வேலி: பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

நெய்வேலி அடுத்த மறுவாய் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 6 மாணவிகளுக்கு, அறிவியல் ஆசிரியர் ஜெயராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நெய்வேலி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஜெயராஜை கைது செய்தனர். இந்நிலையில் ஜெயராஜை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன் நேற்று உத்தரவிட்டார்.
News August 14, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் ஒருமாத காலத்திற்குள் https://tnhealth in gov.in/ingovin/dme/dme.php என்ற இணையதள முகவரியிலோ, தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ பதிவு செய்ய வேண்டும். மேலும் உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.