News December 22, 2025
கடலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை!

கடலூர் மாவட்டத்தில் நாளை (டிச.23) பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சேத்தியாத்தோப்பு, புவனகிரி, சோழதரம், ஒரத்தூர், ஒறையூர், பின்னலூர், நெல்லித்தோப்பு, சாத்தப்பட்டு, கீழாம்பட்டு, வடக்குத்து, இந்திரா நகர், வடலூர், குறிஞ்சிப்பாடி, வளையமாதேவி, பு.ஆதனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி மின்விநியோகம் இருக்காது.
Similar News
News December 22, 2025
கடலூர்: அதிசய கிணறு கொண்ட பெருமாள் கோயில்!

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிசேஷன் கிணறு உள்ளது. பெருமாளுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டபோது, ஆதிசேஷன் தன் வாலால் பூமியைப் பிளந்து, நீரூற்றை ஏற்படுத்தி பெருமாள் தாகத்தை தணித்தார் என சொல்லப்படுகிறது. இந்த கிணறு இன்றும் கோயிலில் உள்ளது. இது ஒரு பிரார்த்தனை கிணறாகவும் கருதப்படுகிறது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 22, 2025
கடலூர்: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
கடலூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077
பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.


