News August 12, 2024
கடலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று, 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 40 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
கடலூர்: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 4, 2026
கடலூர்: விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைப்பு

கடலூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு சம்பா பருவத்திற்கு மாவட்டம் முழுவதும், 2 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 72 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 34 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூபாய் 436 கோடி வரவு வைக்கப்பட்டதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?.. APPLY

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


