News September 27, 2025

கடலூர் மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை!

image

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மேலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW !

Similar News

News November 7, 2025

கடலூர்: அரசு டிரைவர் வேலை – கலெக்டர் அறிவிப்பு

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அதில், கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் இன சுழற்சி மூலம் நிரப்பப்படவுள்ளது. <>cuddalore.nic.in<<>> என்ற இணையத்தின் மூலம் விவரங்களைப் பெற்று வருகிற நவ.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

News November 7, 2025

கடலூர்: சுகாதார ஆய்வாளர் வேலை அறிவிப்பு

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து வரும் நவ.16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News November 7, 2025

கடலூர்: மனைவி கண்டித்ததால் தற்கொலை

image

காட்டுமன்னார்கோயில் அடுத்த குருங்குடியை சேர்ந்தவர் தொழிலாளி அன்பழகன் (46). இவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை, அவரது மனைவி வனிதா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்து விட்டார். பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!