News October 10, 2025
கடலூர்: மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

கடலூர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழில் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கு நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 14 அன்று பள்ளி மாணவர்களுக்கும், 15 அன்று கல்லூரி மாணவர்களுக்கும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 11, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.10) இரவு 10 மணி முதல் இன்று (அக்.11) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!
News October 10, 2025
கடலூரில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

கடலூரில் அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (அக்.11) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் பீச்ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும். இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News October 10, 2025
கடலூர்: அழுகிய நிலையில் பெண் சடலம்

கடலூர், அண்ணா பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரபரப்பாக இருக்கக்கூடிய கடலூர் மையப் பகுதியான அண்ணா மேம்பாலத்தின் கீழ், அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் இன்று மதியம் புது நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதையெடுத்து, சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.