News April 26, 2025

கடலூர்: மாணவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சென்னை, கிண்டியில் உள்ள பயிற்சி நிறுவனத்தில் 2025-2026ஆம் ஆண்டிற்கான உயர்கல்விக்கான நேரடி சேர்க்கை முகாம் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 5.5.2025 முதல் 7.5.2025 வரை நடக்கிறது. இதில் 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டபடிப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை 9677943633, 9677943733 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News September 16, 2025

கடலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW!

News September 16, 2025

கடலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News September 16, 2025

கடலூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விவரங்கள்

image

பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை விரைந்து வழங்கிடும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) கடலூர் மாநகராட்சி வண்டிப்பாளையம் ரோடு செங்குந்தர் மண்டபம், திட்டக்குடி நகராட்சி அலுவலக வளாகம், மேல்பட்டாம்பாக்கம் வசந்தம் மஹால், வடக்கு வெள்ளூர் ஊராட்சி மன்ற கட்டிடம், பூதங்கேணி ஜே.ஏ மஹால் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.

error: Content is protected !!