News October 22, 2025
கடலூர்: மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் சென்றவர் பலி

நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலை சேர்ந்தவர் சம்பத்குமார்(57). இவர் சாவடி சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது மாடு குறுக்கே வந்ததால் திடீரென்று பிரேக் போட்ட சம்பத்குமார் தவறி கீழே விழுந்தார்.
இதில், காயமடைந்த அவரை மருத்துவமனை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
கடலூரில் பரவும் காய்ச்சல் – தீவிர சிகிச்சை

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 24 பேர் சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட127 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து, பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. அதனைத் அவர்கள் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கடலூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
கடலூர்: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

கடலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு இங்கு <
News January 23, 2026
கடலூர்: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.300, +2 வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பட உள்ளது. இதற்கு செம்மண்டலத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


