News January 12, 2026

கடலூர்: மனித கறி கேட்டு ஓட்டலில் ரகளை

image

கடலூர், பொன்னேரியில் தினேஷ் (26) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அங்கு 7 வாலிபர்கள் சாப்பிட வந்தனர். மது போதையில் இருந்த அவர்களிடம் ஓட்டல் ஊழியர், சாப்பிட என்ன வேண்டும் என கேட்டார். அதற்கு அவர்கள் மனித கறி வேண்டும் என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், கவியரசன் (24), பிரசாந்த் (19), ஸ்ரீகாந்த் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.

Similar News

News January 31, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 6,900 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. உரம் 2,655 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 1,730 மெட்ரிக் டன்னும், காம்ப்லக்ஸ் உரம் 7,748 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,541 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 20,653 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது. இந்த உரங்கள் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.

News January 31, 2026

கடலூர்: சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி வெள்ளைச்சாமி (60). இவர் நேற்று கச்சேரி ரோடு வழியாக சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த லாரி, சைக்கிள் மீது மோதியது. இதில் வெள்ளைச்சாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 31, 2026

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் முழு விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.30) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.31) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!