News June 14, 2024
கடலூர் மக்களே நாளை மின்தடை

கடலூர், செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 15) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் காலை 9 மணி முதல் 4 மணிவரை, செம்மங்குப்பம், பெரியக்குப்பம், காரைக்காடு, கருவேப்பம்பாடி, சிப்காட் பகுதி, குடிகாடு, பூண்டியாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 2, 2026
கடலூர்: வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சர்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் கடந்த தேர்தலில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நேரில் சென்று வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News March 1, 2026
காடாம்புலியூர் அதிமுக நிர்வாகி உயிரிழப்பு: EPS இரங்கல்

பண்ருட்டி பணிக்கன்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் A. வேலு காடாம்புலியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தையும் இன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
News March 1, 2026
கடலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<


