News August 22, 2025

கடலூர் மக்களே.. அதிக பணம் வசூலிப்பா?

image

கடலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News April 9, 2026

கடலூர்: இன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!

image

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி புதுவை எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இயங்கும் தமிழக பகுதி டாஸ்மாக் கடைகளை இன்று காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை மூட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிடுள்ளார். மேலும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான அடுத்த மாதம் மே 4-ந்தேதி அன்றும் மதுபான விற்பனையை நிறுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News April 9, 2026

கடலூர்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி..!

image

பண்ருட்டி அருகே உள்ள மருங்கூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கருணாநிதி (55). இவர் மானடிக்குப்பத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது வீட்டில் இருந்த புளியமரத்தில் ஏறி, புளி உளுக்கிக் கொண்டிருந்தார். அப்போது மரத்தின் கிளை எதிர்பாராத விதமாக அருகில் சென்ற மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் தாக்கி கருணாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

News April 8, 2026

கடலூர்: விஜய் பிரச்சாரம் ரத்து

image

கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். அதனை முன்னிட்டு காவல்துறையினர் நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதில், காலை 10 மணிக்கு தொடங்குய பிரச்சாரத்தை 1 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

error: Content is protected !!