News December 29, 2025

கடலூர்: போலி நகை அடமானம் வைத்த 2 பேர் கைது

image

மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜேந்திரன் (31), செல்வமணி (32) இருவரும் சிதம்பரம் மாலை கட்டி தெருவில் உள்ள நகை அடகு கடையில் கடந்த டிச.22-ம் தேதி அன்று மருத்துவ செலவிற்குத் தேவைப்படுவதாக 24 கிராம் 916 நகை என கூறி அடகு வைத்து ரூ.1,90,000 ஆயிரம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர், போலி என அறிந்ததும் கடை உரிமையாளர் ஹீராசத் கோத்தாரி அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் இருவரையும் இன்று கைது செய்தனர்.

Similar News

News December 31, 2025

கடலூர்: வேகமாக வந்த பைக் மோதி மூதாட்டி பலி

image

கடலூர் மாவட்டம், வரக்கால்பட்டையை சேர்ந்தவர் கேசம்மாள் (75). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த பைக் மோதியதில், கேசம்மாள் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 31, 2025

கடலூர்: 121 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

கடலூர் மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை, சைபர் கிரைம், போக்சோ, குற்றவாளிகள், கஞ்சா, குட்கா, சாராய கடத்தல் போன்ற குற்ற செயலில் ஈடுபட்ட 28 குற்றவாளிகள் உள்ளிட்ட 121 பேர் குண்டர் தடுப்பு காவலில் 2025 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். .

error: Content is protected !!