News September 9, 2025

கடலூர்: பொதுமக்களிடம் 498 மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

கடலூரில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 498 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 9, 2025

ஆலப்பாக்கம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி” திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (09.09.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News September 9, 2025

கடலூர்: தப்பி ஓடியவரை சுட்டுப்பிடித்த போலீசார்

image

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் மோதிய வழக்கில் தப்பியவரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர். கஞ்சா போதையில் 3 இளைஞர்கள், 4 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கில் கந்தவேல் என்பவர் தப்பி ஓடினார். மேலும் தப்பியோடிய கந்தவேல் என்பவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 9, 2025

ஆலப்பாக்கம்: வீடுகள் கட்டுமான பணி-ஆட்சியர் ஆய்வு

image

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வரின் வீடுகள் மறுகட்டமைப்பு திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (09.09.2025) காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பல்வேறு துறை அரசு அதிகாரிகளுடன் இருந்தனர்.

error: Content is protected !!