News February 5, 2026

கடலூர்: பெண் தலை நசுங்கி பலி

image

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையை சேர்ந்தவர் சின்னம்மாள்(55). இவர் தனது மகன் ஆறுமுகம் (35), மகள் அம்சவல்லி ஆகியோருடன் நேற்று வேப்பூருக்கு வந்து பின், மீண்டும் பைக்கில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் சின்னம்மாளின் தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். மற்ற 2 பேரும் உயிர் தப்பினர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News February 8, 2026

கடலூர்: மாணவியை கடத்திய 16 வயது சிறுவன் கைது

image

நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயதான மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கடத்தி சென்ற வடலூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.

News February 8, 2026

கடலூர்: பள்ளத்தில் கவிழ்ந்த கார்

image

சிதம்பரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குமராட்சி அருகே வீரநத்தம் என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

News February 8, 2026

கடலூர்: ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் முழு விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப் 7) இரவு 10 மணி முதல் இன்று (பிப் 8) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!