News October 17, 2025
கடலூர்: புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் வெளியீடு

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, பலகாரம் மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணை நேற்று வெளியிட்டார். இந்த எண்ணில் தரம் மற்றும் சுகாதாரம் இல்லாத உணவுப் பொருட்கள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
இடை நின்ற 1,671 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

கடலூர் மாவட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்கிறது. 16 வட்டாரங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பில் 1671 மாணவர்கள் இடை நின்றது கண்டறியப்பட்டது. அவர்களின் வீடுகளுக்கு சென்று கல்வியின் முக்கியத்துவத்தை கூறி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
கடலூர்: பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

வேப்பூர் அடுத்த பூலாம்பாடியை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ராஜதுரை (33). இவர் நேற்று முன்தினம் வேப்பூர் விருத்தாசலம் சாலையில் பைக்கில் சென்றார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜதுரை நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 6, 2025
கடலூர்: பெண் குழந்தை உள்ளதா? இத செய்ங்க!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE IT NOW…


