News March 26, 2024
கடலூர்: பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கடலூர் நாடாளுமன்ற தொகுதி கடலூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சண் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 5, 2025
கடலூர்: எஸ்.பி அலுவலகத்தில் பெட்டிஷன் மேளா

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில், இன்று(நவ.5) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
News November 5, 2025
கடலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

கடலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News November 5, 2025
கடலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 9 தொகுதிகளில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று நேற்றோடு நிறைவு பெற்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து முகாம்களும் நிறைவடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


