News January 7, 2026

கடலூர்: பாதி வழியில் பழுதாகி நின்ற ரயில்!

image

சென்னை எக்மோரில் இருந்து கன்னியாகுமரிக்கு தினசரி செல்லும் கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு 8:40 மணிக்கு விருத்தாசலம் ஜங்ஷனுக்கு வந்தபோது, ரயிலின் பின்புறம் உள்ள பொது பெட்டியில் பிரேக் பழுதாகி இருந்ததை, லோகோ பைலட் கண்டு பிடித்தனர். பின்னர் ரயில்வே ஊழியர்கள் பழுதான பிரேக்கை சரி செய்ததும், சுமார் 1.5 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Similar News

News February 6, 2026

கடலூர் மாவட்டத்தில் இயல்பை விட மழை அதிகம்!

image

கடலூர் மாவட்டத்தில் ஜன.1ஆம் தேதி முதல் இன்று பிப்.6 வரை இயல்பாக 28.1 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 30 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News February 6, 2026

கடலூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில் <>mylpg<<>> என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News February 6, 2026

கடலூர் மக்களே… இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT.

error: Content is protected !!