News December 21, 2025

கடலூர்: பாட்டிலுக்கு ரூ.10; புதிய திட்டம் அமல்

image

கடலூர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை, காலியாகிய பின் அதே டாஸ்மாக் கடையில் திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் நாளை (டிச.22) முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக மது பாட்டில்களை வாங்கும் போது கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு, காலி பாட்டிலாக அதே கடையில் ஒப்படைக்கும்போது அந்த தொகை திரும்ப வழங்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 30, 2025

கடலூர்: திருமணத் தடை நீக்கும் பாண்டியநாயகர் கோயில்!

image

சிதம்பரம் நடராஜர் கோயில் வடக்கு கோபுரம் அருகே வள்ளி தெய்வானை சமேத பாண்டியநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிபல்வேறு காரணங்களால் தடைபட்டு வரும் திருமணங்கள் நடைபெற றப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது. பின்னர்,திருமணம் கைகூடிய உடன் இக்கோயிலிலேயே திருமணமும் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் திருமண தடை நீக்கும் முதன்மை கோயிலாக, இக்கோயிலில் மக்களால் கருதப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க..!

News December 30, 2025

கடலூர்: ஊட்டச்சத்து உணவுகளை பரிமாறிய ஆட்சியர்

image

“இரத்த சோகையில்லா கடலூர்” திட்டத்தில் கடலூர், அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஊட்டச்சத்து உணவுகளை இன்று (30.12.2025) பரிமாறினார். அப்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பொற்கொடி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News December 30, 2025

கடலூரரில் 1,472 விவசாயிகள் பயன்!

image

கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 1,472 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் நுண்ணீர் பாசனத் திட்டம், வேளாண் பொறியியல் இயந்திரங்கள் வழங்கல், இடுப்பொருட்கள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள் வாங்கிட தனிநபர் மானியத் திட்டம், கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல்‌ திட்டம் இடம்பெற்றுதாக மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!