News March 3, 2026
கடலூர்: பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சாரம்

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் மேற்கு ஒன்றியம் நடுவீரப்ட்டு, புதுக்குப்பம், பட்டீஸ்வரம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், வாக்குச்சாவடி திருவிழா என்ற பெயரில், திமுக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை துண்டு பிரசுரமாக வினியோகம் செய்து, நேற்று பிரச்சாரம் மேற்கொண்டனர். மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News March 13, 2026
கடலூர்: வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை குறைதீர் முகாம்

கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (14.3.2026) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், வேப்பூர், பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட 10 தாலுகா அலுவலகங்களிலும் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
News March 13, 2026
கடலூர்: பேருந்து நிறுத்தத்தில் கிடந்த சடலம்

கடலூர் மஞ்சக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து, இறந்து கிடந்த முதியவர் யார் என விசாரித்த போது, அவர் கடலூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலைசெல்வம் (56) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், கலைசெல்வம் எப்படி இறந்தார் என தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
News March 13, 2026
கடலூர்: டூவீலர் விபத்தில் இளைஞர் பரிதாப பலி

சேத்தியாதோப்பு அடுத்த சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் வினோத் (27). இவர் நேற்று இரவு தனது பைக்கில் சேத்தியாதோப்பு நோக்கி சென்ற போது அவ்வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வினோத்தை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


